உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நகராட்சி வாரியக் கூட்டத்தில், 196 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பரிந்துரைகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்ததும் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மாநகர சபைக் கூட்டத்தில் இரண்டு முஸ்லிம் பெண் கவுன்சிலர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை அளிக்காமல் அமர்ந்திருந்தனர். தேசிய கீதத்தை அவர்கள் அவமதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுப்பப்பட்டும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இது தொடர்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.