கோயிலை இடிக்கும் கவுன்சிலர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக உள்ள தி.மு.கவைச் சேர்ந்த ரஞ்சனியின் கணவர் சுதந்திரம், அ.தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் பாண்டியம்மாள் கணவர் உக்கிரபாண்டி, மேலும் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, காங்கிரஸ், சுயேச்சைகள் என கட்சிப்பாகுபாடு இல்லாமல் கவுன்சிலர்கள் இணைந்து அங்குள்ள நூலகத்தின் பின்புறம் இருந்த பழமைவாய்ந்த விநாயகர், இரகாமன் கோயில் சிலைகளை இடித்து தள்ளிவிட்டு 28 கடைகள் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் கடைகள் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையர், காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. எனினும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்தது. அரசியல்வாதிகள் என்பதால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இது குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து கடைகள் கட்டும்பணி நிறுத்தப்பட்டது. கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.கவினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கமிஷனர் பாண்டி விடுப்பில் சென்றுவிட்டார்.