கௌன்சிலர்கள் சுட்டுக்கொலை

மத பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வன்முறைகளை நம்பியே ஆட்சியை நடத்துபவர் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி. மேற்கு வங்க ஆளுநர், நீதிமன்றம், மத்திய அரசு என யார் எச்சரித்தாலும் மமதாவின் ஆட்சியின் கீழ் மேற்கு வங்கத்தில் சட்ட விரோத செயல்பாடுகள் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இருவேறு சம்பவங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கௌன்சிலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புருலியா மாவட்டத்தின் ஜல்டா நகராட்சியில், நான்கு முறை காங்கிரஸ் கவுன்சிலராக இருந்த தபன் காண்டு சுட்டு கொல்லப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் ஜல்டா நகராட்சியில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.  அதனால், அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை தடுக்கவும், தாங்கள் ஆட்சி அமைக்கவும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் காண்டுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ்.  மற்றொரு சம்பவத்தில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பானிஹாட்டி நகராட்சியின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரான அனுபம் தத்தா, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நகராட்சியில் பதவி பெறுவதில் திருணாமுல் காங்கிரசினரிடையே ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் இச்சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.