டிஆர்டிஓ தயாரிக்கும் கொரோனா மருந்து 2டிஜி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான மருந்துகளைத் தயாரிக்க உலக நாடுகளே திணறிவரும் நிலையில், அதற்கான மருந்தை முதலில் சந்தைக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது, பாரத ராணுவம். பாதுகாப்பு ஆய்வு, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் நிறுவனம், 2 டியோக்ஸி-டி-குளுகோஸ் ஓரல் (2டிஜி) என்ற பெயரிலான கொரோனா தடுப்பு மருந்தை, டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வகத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. பவுடர் முறையிலான இந்த மருந்தின் விலை ரூ.990. இந்த பவுடரை தண்ணீரில் கலந்து அருந்தினால் விரைவாக கொரோனா குணமடையும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கும், மத்திய – மாநில அரசுகளுக்கும் இந்த மருந்து சலுகை விலையில் அளிக்கப்படும். மே 27 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர், முதல் கட்டமாக 10,000 மருந்து பொட்டலங்களை வெளியிட்டார்கள்.
– பிரவீண்