கொரோனா பொதுமக்களை மட்டுமல்ல, கம்யூனிச பயங்கரவாதிகளையும் விட்டுவைக்கவில்லை. பல பயங்கரவாதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். முன்னதாக, உத்தராகண்ட், பஸ்தர் காவல்துறைத் தலைவர் சுந்தர் ராஜ், பயங்கரவாத மாவோயிஸ்டுகள் சரணடைந்து, கொரோனாவுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஆனால், யாரும் சரணடையவில்லை. இந்நிலையில், ‘தர்பா பிரிவின்’ ராணுவத் தளபதியான வினோத் என்ற ஹேம்லா ஹங்கா கொரோனா காரணமாக சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இவரது தலைக்கு ரூ. 15 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல, மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் ஹரிபுஷன், அவரது மனைவி ஷரதா ஆகியோரும் கொரோனாவுக்கு பலியானார்கள். அவர்களது தலைக்கு ரூ. 50 லட்சம் அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில், பல மாவோயிஸ்ட்டுகளை கொரோனா சத்தமே இல்லாமல் கொன்றுள்ளது.