கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கேரள காங்கிரஸ் தலைவராக கே.சுதாகரனை தேர்ந்தெடுக்க இந்திரா பவனில் நடைபெற்ற விழாவில், கொரோனா நடத்தை விதிமுறைகளை மீறி, 1,500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கூடினர். 350 இருக்கைகள் கொண்ட மண்டபத்திற்குள் 500 பேர் நுழைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வெளியே கூடி இருந்தனர். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா உட்பட பல தலைவர்களும் சரியாக முகக்கவசம் அணியாமல் காணப்பட்டனர். இதற்கு அனுமதித்த கேரள கம்யூனிச அரசுக்கு எதிராக புகார்கள் எழுந்தன. எனவே, வேறு வழியின்றி கேரள காவல்துறை தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதில் ஒரு சில மூன்றாம் கட்டத் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றதே தவிர, முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. முன்னதாக, பா.ஜ.கவின் உயர்மட்டக் கமிட்டி கூட்டத்தை நடத்த கொரோனாவை காரணம் காட்டி கேரள அரசு அனுமதி அளிக்க மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.