ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்துடன் இணைந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வின் முன்னணி ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐ.என்.எம்.ஏ.எஸ்)கண்டுபிடித்துள்ள 2 டிஜி மருந்தின் விலை, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தால் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.990 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த மருந்து அரசு மருத்துவமனைகளுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், 2-டிஜியின் இரண்டாவது தொகுதியை வெளியிட்டது டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம்.இந்த மருந்தின் வழக்கமான உற்பத்தி ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.