கொரோனா 4வது அலை

உலகை கொரோனா பாதிப்புகள் கடந்த 2019 இறுதியில் இருந்து மிரட்டி வருகிறது. 2021 முற்பகுதியில் டெல்டா வகை வைரசால் கொரோனாவின் 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் அதிவேக பரவல் கொண்டிருந்தது. எனினும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை. தற்போது கொரோன பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா 4வது அலை பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கொரோனா 4வது அலையானது வருகிற ஜூன் 22ல் தொடங்கி அக்டோபர் 24 வரை நான்கு மாதங்கள் நீடிக்கும். இந்த அலை ஆகஸ்டு 15 முதல் 31 வரை உச்சமடையும். பின்னர் குறையத் துவங்கும். எனினும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப 4வது அலையின் கடுமை அமையும் என தெரிவித்துள்ளனர்.