கேரளாவை ஆளும் இடதுசாரிகளின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூரை சேர்ந்த கொண்ட கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மெகா உழல்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிச்சத்திற்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்த அமலாக்கத்துறை, அவர்களின் வீடுகளில் சமீபத்தில் சோதனை நடத்தியது. கடந்த வாரம், தற்போது எங்களிடம் ரூ. 60 லட்சம் ரொக்கம் மட்டுமே உள்ளது. சொத்துக்களை விற்று டெபாசிட் செய்பவர்களுக்கு பணம் செலுத்தலாம் என்று வங்கி கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து நீதிமன்றம், ஊழல் கறைபடிந்த இந்த கூட்டுறவு வங்கிக்கு அவசரகாலத் தொகையைத் தவிர மற்ற அனைத்து வரவு செலவுகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டது. டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்த வழிமுறை வகுக்குமாறு பினராயி விஜயன் அரசுக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கில் தற்போது, சேமிப்பை இழந்த அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். டெபாசிட் செய்தவர்களுக்கு முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த கேரள வங்கி உட்பட பல்வேறு மூலங்களிலிருந்து கடன் பெறப்படும். வங்கியின் சொத்துக்களை அடமானம் வைத்து ரூ. 50 கோடி ரூபாய் கடன் பெறப்படும். பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க அரசு 12 நாட்கள் அவகாசம் தேவை என கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.