மதமாற்றம் செய்த கன்னியாஸ்திரிகள் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்ததாக ரோஸ் மேரி மற்றும் ஜிசா என்ற இரண்டு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஹிந்து கடவுள்கள் மற்றும் பெண் தெய்வங்களின் படங்கள் மீது எச்சில் துப்பி கிழித்து எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு பெண்களும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் தொடர்புடையவர்கள். இருவரும் உள்ளூர் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியான சிடிஎம் உயர்நிலைப் பள்ளியில் கன்னியாஸ்திரிகளாக உள்ளனர். இந்த கட்டாய மதமாற்ற சம்பவத்திற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த மதமாற்ற சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதி எஸ்.டி.எம் மற்றும் டி.எஸ்.பி ஆகியோர் கிராமத்திற்கு வந்தனர். அப்போது, ​​இந்த இருவரும், சுனிதா என்ற பெண்ணை மதம் மாற வற்புறுத்துவதை கண்டனர். சுனிதாவின் கணவரின் பெயர் வில்லியம், அவர் ஒரு கிறிஸ்தவர், அவரது மனைவி ஹிந்து. எனவே அவரை கட்டாய மதமாற்றம் செய்ய இவர்கள் முயன்றனர். இந்த வழக்கில் கூடுதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கிடையே, இதுகுறித்து பேசிய சுனிதா, “என்னை கிறிஸ்தவராக வேண்டும் என்று அவர்கள் முயன்றனர். நான் மறுத்துவிட்டு ஹிந்துவாக இருப்பேன் என்று சொன்னேன். எனக்கு 2 மகன்கள் உள்ளனர்.  அவர்களும் எதிர்காலத்தில் ஹிந்துக்களாகவே இருப்பார்கள்” என்றும் உறுதிபட கூறினார்.