உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுராவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மெஹ்ராலி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 90 சதவீத குடும்பங்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள். இங்கு மீதமுள்ள ஹிந்துக்களையும் கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் முயற்சியில் அங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்தில் வசிக்கும் தேஜ்ராம் என்ற ஒரு ஹிந்து முதியவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், “என்னை வீடு புகுந்து மிரட்டிய முஸ்லிம் இளைஞர்கள் என் வீட்டை சூறையாடினார்கள். பின்னர் முஸ்லிமாக மாறாவிட்டால் கொலை செய்வோம் என கூறி விரட்டினர். மெஹ்ராலி கிராமத்தில் எஞ்சியுள்ள ஹிந்துக்களின் நிலங்கள், சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அவர்களை மிரட்டுகின்றனர். இது எங்கள் கிராமம். நீங்கள் இங்கே தங்க விரும்பினால், எங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும். கிராம மக்கள் தொகையில் 90 சதவீதம் முஸ்லிம்கள்தான். நீங்கள் எங்களைத் தொந்தரவு செய்தால், உங்களது உயிர், உடைமை, நிலங்களை இழக்க வேண்டியிருக்கும். முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையெனில் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அந்த இளைஞர்கள் மிரட்டி வருகின்றனர்’ என அவர் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். தேஜ்ராமின் புகாரையடுத்து மதுரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரை மிரட்டிய குற்றவாளிகளை மும்முரமாக தேடி வருகின்றனர்.