பார்ட்நைட் என்ற விளையாட்டு செயலி மூலம் சிறுவர்களை மதமாற்றும் முஸ்லிம் கும்பலை உத்தரப்பிரதேச போலீசார் கண்டுபிடித்து, ஒருவரை கைது செய்துள்ளது. இந்த கும்பலின் முக்கிய நபரான ஷாநவாஸ் கான்-ஐ தேடி உ.பி போலீசார் மகாராஷ்டிரா விரைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பார்ட்நைட் என்ற ஆன்லைன் விளையாட்டு செயலி பிரபலமாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சிறுவர்களை மதம் மாற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் இந்த செயலியை பயன்படுத்தும் சிறுவர்களை கண்காணித்து வந்தனர். இதன்மூலம் காஜியாபாத்தில் உள்ள சஞ்சய் நகர் மசூதியின் மௌலவி அப்துல் ரஹுமான் என்பவரை கைது செய்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு பெரிய கும்பல் சிறுவர்களை சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யபடுவது தெரியவந்தது.
பார்ட்நைட் செயலியை பயன்படுத்தி விளையாடும் சிறுவர்கள் தோற்கும்போது இந்த கும்பல் சாட்டிங் வசதி மூலம் தொடர்புகொண்டு, இந்த விளையாட்டில் வெற்றிபெற வேண்டுமானால் இஸ்லாம் மதத்தின் சில வார்த்தைகள் கூறவேண்டும் என கூறுகின்றனர். சிறுவர்கள் அந்த வார்த்தைகளை கூறிய பின் அந்த கும்பல் வெற்றிபெற செய்கிறது. இதுபோன்று சிறுவர்களுக்கு அந்த மதத்தின் மீது நம்பிக்கையும், ஈடுபாடும் ஏற்படும்படி முயற்சிகளை அந்த கும்பல் செயல்படுகிறது.
இந்த செயலியை பயன்படுத்தும் சிறுவர்களுக்கு குறிப்பாக ஜாகிர்நாயக் மற்றும் பாகிஸ்தானில் உள்ள மதப்பிரசாரகர்களின் வீடியோக்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதன்மூலம் சிறுவர்களை மதமாற்றம் முயற்சியில் இந்த கும்பல் ஈடுபடுகிறது.
இதுகுறித்து காஜியாபாத் போலீஸ் உதவி ஆணையர் கூறியதாவது:
இந்த செயலி வாயிலாக விளையாடிய சிறுவர்களை மதமாற்றியது உறுதியாகியுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி இந்த செயலியை பயன்படுத்தி மற்ற நாடுகளிலும் மதமாற்றும் முயற்சி நடைபெற்றுள்ளது என்று கூறினார். இந்த கும்பலுக்கு மூளையாக செயல்படும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஷாநவாஸ்கான் கைது செய்யப்பட்டால் மேலும் சில தகவல்கள் வெளியாகும் என கூறினார்.