மதமாற்றம் நம்மை வேரிலிருந்து பிரிக்கும்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ சிவசரண் மதராசன்னையா குருபீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களிடையே உரையாற்றிய ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத், “மத மாற்றம் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கிறது. மதமாற்றம் ஒருவரை வேரிலிருந்து பிரிக்கிறது. எனவே, மத மாற்றத்தைத் தடுக்க நாம் பாடுபட வேண்டும். பாரதம் பாரதமாகவே இருக்க வேண்டுமென்றால், நாம் (கலாச்சார ரீதியாக) எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்க வேண்டும். இல்லையெனில் பாரதம் பாரதமாக இருக்காது, எனவே, “தர்மம்” எங்கும் வியாபிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஹிந்து சமுதாயம் இன்னமும் தீண்டாமை, சமத்துவமின்மை போன்ற பிரச்சனைகளின் பிடியில் உள்ளது. அவை மனதில் மட்டுமே உள்ளன. ஆனால், அவை வேதங்களில் கூறப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக நம் மனதில் இருந்து வரும் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, மறைவதற்கு சிலகாலம் ஆகலாம். இப்பிரச்னைக்கு நாம் தீர்வு காண வேண்டும். அது நிச்சயம் ஒரு நாள் நடக்கும். அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்களை மதிப்பது, பெண்களை கண்ணியமாக நடத்துவது போன்ற பாரதிய கலாச்சாரத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். நவீன கற்பித்தல் முறை கல்வியை அளிக்கிறது, ஆனால் அது கலாச்சாரத்திலிருந்து நம்மை தூரமாக்குகிறது. கலாச்சாரத்தையும் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்றால், துறவிகள், குருமார்கள் போன்றோர் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளுடன் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.