டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஹிந்துக்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய புத்தகங்களை கிறிஸ்தவ மிஷனரிகள் விநியோகிக்க முயன்றதாக ஐக்கிய இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கிறிஸ்தவ மிஷனரிகள் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஹிந்துக்களை மதமாற்றத்திற்கு தயார்படுத்த முயற்சிப்பதாகவும் அப்பாவி ஹிந்து குழந்தைகளுக்கு இவை இலவசமாக விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியது. ஐக்கிய இந்து முன்னணியின் தேசிய துணைத் தலைவர் தர்மேந்திர பேடி, டெல்லி தலைவர் ராகுல் மஞ்சந்தா மற்றும் அமைப்பின் பிற தொண்டர்களும் அந்த இடத்திற்கு வந்ததை அடுத்து புத்தகக் கண்காட்சியில் போராட்டம் வெடித்தது. இந்த அமைப்பின் சர்வதேச செயல் தலைவரும், ராஷ்டிரவாடி சிவசேனாவின் தேசிய தலைவருமான ஜெய் பகவான் கோயல் கூறுகையில், கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு பணிபுரிபவர்கள் ஹிந்துக்களைப் பற்றி தவறாகப் பேசி அவர்களை ஹிந்து மதத்தை விட்டு வெளியேறி கிறிஸ்தவ மதத்தை ஏற்கும்படி வற்புறுத்துகிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் அமைத்துள்ள புத்தகக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊக்கத்தைத் தொடர்ந்து தேசிய தலைநரான டெல்லியில் வெளிப்படையாக மதமாற்றங்கள் செய்யப்படுகிறது. மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறையும் நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.