உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷயார் முனாவர் ராணா, சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிடுபவர். அவ்வகையில், உத்தரப்பிரதேச அரசின் உத்தேச மக்கள்தொகைக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த ராணா, ‘முஸ்லிம்களுக்கு 8 குழந்தைகள் தேவை. எனவே, இந்த கொள்கை நல்லதல்ல. பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இருவரை காவல்துறையினர் கைது செய்தால், இரண்டு பேர் கொரோனாவில் இறந்து விடுகின்றனர். மீதமுள்ள 4 பேர் வயதான பெற்றோரை பராமரிக்க இருப்பார்கள்’ என ஒரு புது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், ‘யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானால் உ.பியை விட்டு வெளியேறுவேன். பா.ஜ.க வெற்றிபெற ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி காரணமாக இருப்பார்’ என தெரிவித்தார். சில நாட்களுக்கு முன், இவரது மகனை இருவர் தாக்கினர் என்ற விவகாரம் பரபரப்பானது. அதனை காவல்துறை விசாரித்தபோது, சட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயத்திற்காக நட்த்தப்பட்ட நாடகம் அது என கண்டறியப்பட்டது. ராணாவின் அரசியல் சர்ச்சைகளுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.