பெண்களின் திருமண ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஆலியா பட், ‘ஒரு பெண்ணை தானமாக வழங்கும் பழங்கால நடைமுறை இனியும் வேண்டுமா’ என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துக்களின் பாரம்பரிய திருமண நடைமுறையில் உள்ள ஆழமான அர்த்தங்கள், அதன் கலச்சார பெருமைகளை உணராமல் வெற்று விளம்பரத்திற்காகவும், அந்த விளம்பரத்தை பிரபலமாக்குவதற்காகவும் இப்படி பேசி வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் அந்த நடிகை. ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் உள்ளதாக கூறி, அந்த நிறுவனத்தின் முன்பாக பல்வேறு ஹிந்து அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும். அந்த நிறுவனமும் நடிகையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.