சர்ச்சை விளம்பரம் நீக்கம்

திருச்சி மாவட்டம் இ.பி ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அம்பேத்கர் சிலை அருகில், சர்ச்சைக்குரிய வகையில், ‘தலித் சிறுபான்மையினர் மதம் மாறிய இஸ்லாமிய கிறிஸ்டியன் பாய்ஸ் மற்றும் கிறிஸ்டியன் இஸ்லாம் நபி மாநகராட்சி’ என்று விளம்பர பலகையும் சுவர் விளம்பரமும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற காவல்துறை அதிகாரிகளிடம் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற காவல்தூறையினர் அதன் விளம்பரத்தை நீக்கினர்.