மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவின் சந்தனநகர் மற்றும் பாலிகுங்கே தில்ஜாலா பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை அன்று, இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காளிக் கோயில் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. காவல்துறை வாகனம் சூறையாடப்பட்டது. நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. சஞ்சீப் பாசு என்ற பத்திரிகையாளர் தாக்கப்பட்டார். அந்தப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட மம்தா பானர்ஜியின் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என ஆளுநர் ஜகதீப் தங்கர் கூறியுள்ளார். ‘திருணாமுல் கட்சி குண்டர்கள் நாட்டில் ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகின்றனர்’ என இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளார் பாஜக எம்.எல்.ஏவும், மேற்கு வங்காள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து ஆதிகாரி.