மத்திய குடிநீர் அமைச்சகமான ஜல் சக்தி, மக்களுக்கு சுகாதாரமான மற்றும் போதுமான குடிநீர் வழங்க ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை கடந்த 2019ல் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ‘கொரோனா தொற்று, பொதுமுடக்கம் அமலில் இருந்த போதும், ஜல் ஜீவன் திட்டம் கடந்த 23 மாதங்களில் புதிதாக 4.49 கோடி குழாய் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 71 மாவட்டங்கள், 824 வட்டங்கள், 50,309 கிராம பஞ்சாயத்துகளில், 1,00,275 கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.