தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமானது என கூறப்படும் ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஏப்ரம் 24 அன்று திடீர் சோதனை நடத்தினர். மேலும் தி.மு.க எம்.எல்.ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கார்த்திக்கின் உறவினர் வித்யாசாகர் ராமதாஸ் என்பவரது வீடு, ஓசூர், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத் என சுமார் 50 இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் இரண்டாவது நாளாக இந்த சோதனை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.