அடங்கிய திமிர்

நடிகர் துருவா சர்ஜா நடிப்பில், சமீபத்தில் வந்த கன்னட திரைப்படம் ‘பொகரு’. ‘திமிர்’ என பொருளுடைய இத்திரைப்படத்தில், செருப்பு காலால், பூணுால் அணிந்த பிராமணரை எட்டி உதைப்பது போன்ற பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சிகளை நீக்கும்படி, பெஜாவர் மட பீடாதிபதி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். பொதுமக்களும் வலியுறுத்தினர். கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, பிராமணர் அபிவிருத்தி வாரியம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அக்காட்சிகளை நீக்குவதாகவும் தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும்  திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் தெரிவித்தனர். ‘சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும், இது போன்ற சமுதாய அவமதிப்பு காட்சிகள் இருக்கக்கூடாது. நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினர். பிராமணர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று மந்திராலயா மடாதிபதி இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘இது பிராமண சமுதாயத்துக்கு மட்டுமல்ல, ஹிந்து சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி’ என கர்நாடக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.