ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு

ஈரோட்டில் ஆசிப் முசாப்தீன் மற்றும் யாசின் என்ற இரண்டு முஸ்லிம் பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ அமைப்பினர் கடந்த ஜூலை 26 அன்று கைது செய்தனர். இருவரது வீடுகளில் இருந்த அலைபேசி, லேப்டாப், சிம் கார்டு, வங்கி பாஸ் புக், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இருவரிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகளும் கியூ பிராஞ்ச் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவினர் ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். யாசினிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.