நுகர்வோர் குறைதீர் பயிலரங்கம்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரத் துறை, தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும், ‘செயல்திறன் மிக்க, வேகமான மற்றும் தடையற்ற நுகர்வோர் குறைதீர்வுக்கான தொலைநோக்குப் பார்வை’ என்ற தேசிய பயிலரங்கை நடத்தியது. மாநில ஆணையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஆணையங்களின் தலைவர்கள், மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் டெல்லியில் நேற்று நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். பயனுள்ள வகையில் மற்றும் விரைவான நுகர்வோர் பிரச்சனைகளை  நிவர்த்தி செய்வது குறித்து விவாதிப்பதும் ஆலோசிப்பதும் இந்த பயிலரங்கின் நோக்கமாகும். நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நுகர்வோர் ஆணையங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்களைப் புரிந்துகொள்வது மற்றும் சட்ட விதிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் இந்த கவலைகளை நிவர்த்தி செய்வதும் இதன் நோக்கமாகும். மத்திய அமைச்சர்கள் அஷ்வினி குமார் சௌபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி,  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர்.கே.அகர்வால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.