பழங்குடியை கொடுமைப்படுத்திய காங்கிரசார்

மகாராஷ்டிரா, பால்கரை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுனில் புஜாராவின் நெருங்கிய உதவியாளர் ராமதாஸ் அம்பு கோர்டே. இவர், பழங்குடியினத்தை சேர்ந்த கலு பவார் என்பவருக்கு அவரது மகனின் இறுதிச் சடங்கிற்காக ஐநூறு ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதற்காக கலு பவாரை தனது விவசாய நிலத்தில் வேலை, கால்நடை மேய்ச்சல் என பல மாதங்களாக கொத்தடிமையாக வைத்துள்ளார். இரண்டு வேளை உணவு, அடித்தல், சம்பளம் மறுப்பு என பல கொடுமைகளை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கலு பவார், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலையை மறைக்க முயன்றுள்ளார் கோர்டே. சமூக ஆர்வலரான விவேக் பண்டிட்டின் முயற்சியால் இந்த விஷயம் வெளியானது. இதனையடுத்து, கோர்டே மீது கட்டாய தொழிலாளர் முறை, கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை. தனது உதவியாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ புஜாரா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.