காங்கிரஸ் டூல்கிட் – வெளிவரும் உண்மைகள்

காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்ட கருவித் தொகுப்பில் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சிக்கவும், காங்கிரசுக்கு ஆதரவான அலையை உருவாக்கவும் பல செயல் திட்டங்கள் வகுத்துத் தரப்பட்டன. இதில் தேசத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் பல குறிப்புகளும்கூட இடம் பெற்றன.இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது.இந்த டூல்கிட்டை அம்பலப்படுத்திய பா.ஜ.க தலைவர்கள் கணக்கை முடக்க காங்கிரஸ் டுவிட்டரை கேட்டுக்கொண்டது.டுவிட்டரும் காங்கிரசுக்கு விஸ்வாசமாக செயல்பட்டது.இரு தினங்களுக்கு முன் டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி காவல்துறை அதிரடி சோதனையும் முதற்கட்ட விசாரணையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் சௌமியா வர்மா என்பவர்தான் காங்கிரஸ் கட்சியின் இந்த கருவித்தொகுப்பின் தொகுப்பாளராக செயல்பட்டுள்ளார் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த  விவரங்கள் வெளியான உடன் அவர் தனது டுவிட்டர் கணக்கை அவர் உடனடியாக நீக்கிவிட்டார். எனினும் இது காங்கிரஸ் கட்சியினர்  தயாரித்ததுதான் என்று உறுதிப்படுத்தும் ஆவணம் தற்போது சௌமியாவின் பதிவுகள் மூலமாக வெளியாகியுள்ளது.

இவரது இந்த டூல்கிட்டில் ‘கொரோனா கால நெருக்கடியில், பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு பீதியை உருவாக்குவது, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை எவ்வாறு பதுக்கி வைப்பது, காங்கிரஸ் கட்சிக்கு நல்லெண்ணத்தை உருவாக்க அதனை எப்படியெல்லாம் பயன்படுத்துவது’ என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸின் இந்த செயல், மக்கள் இறந்தாலும் பரவாயில்லை, மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை, நமது தேசத்திற்கு உலக நாடுகளிடம் அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. தாங்கள் அதனால் அரசியல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற காங்கிரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவே இந்த டூல்கிட் அமைந்துள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

ராகுல் காந்தியின் சமூக ஊடகக் குழுவில் பணிபுரியும் சமூக ஊடக ஆர்வலர் சஞ்சுக்தா பாசு, கடந்த வியாழக்கிழமை இந்த கருவித்தொகுப்பை ஆதரித்து, “ஆம், அதனால் என்ன?எதிராளியின் பிம்பத்தை அழிக்க பிரச்சாரங்களை நடத்துவது ஒரு அரசியல் கட்சியின் பிறப்புரிமை.இறுதியாக காங்கிரஸ் கட்சி ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளது.இதற்கு மோடி ஏன் அழுகிறார்?அவர்கள் எப்போதும் மக்கள் தொடர்பு மற்றும் பிரச்சாரத்தில் சரியாக ஈடுபட்டதில்லை” என கருத்து தெரிவித்ததும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.