வேவு பார்த்த காங்கிரஸ்

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘காங்கிரசும் சில எதிர்க்கட்சிகளும் கோஷம் எழுப்பிவிட்டு ஓடும் சூத்திரத்தை பின்பற்றுகின்றனர். மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர், ஆனால், அதற்கு அவர்களே உடன்படவில்லை. விவசாயிகள் பிரச்னை பற்றி விவாதம் தேவை என்றார்கள், அதனை செய்யவில்லை. நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, அது குறித்தும் அவர்கள் விவாதிக்கவில்லை. ஆனால், அவர்கள் புனையப்பட்ட ஒருசில பிரச்னைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றனர். முன்பு இதேபோல ரபேல் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்த முயன்றது காங்கிரஸ். பின்னர் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்று உளவுப் பார்க்கப்பட்டதாக கூச்சலிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஆட்சியில் தனது சொந்த நிதி அமைச்சரை வேவு பார்த்ததாக அந்த அமைச்சரே அரசு மீது குற்றம்சாட்டினார். இதுதான் காங்கிரஸ்’ என தெரிவித்தார்.