இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் பா.ஜ.க 32 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடனும், நாகாலாந்தில் கூட்டணி முறையிலும் ஆட்சியமைக்கிறது. மேகாலயாவில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மேகாலயாவில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள தேசிய மக்கள் கட்சி, மீண்டும் பா.ஜ.க மற்றும் இதர பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உல்ளது. தோல்வி பயத்தால், இத்தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. எனினும் தோல்வையைத் தழுவியது. இந்த சூழலில், காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது டுவிட்டர் பதிவில்,”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் கஸ்பா பெத்தை வென்றது. 51 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்காளத்தில் சாகர்திகி தொகுதியை வென்றது, திரிபுராவில் 0 இடத்திலிருந்து 5 ஆகவும், மேகாலயாவில் 21 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்ட போதிலும் 5 இடங்களையும், தமிழக இடைத்தேர்தலிலும் வென்றிருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “மூன்று மாநிலங்களில் பெற்ற தோல்வியை ஒரு சாதனையாக மாற்றுவதன் மூலம் காங்கிரஸின் திறனை பாராட்டத்தான் வேண்டும்” எனத் கிண்டல் செய்துள்ளார்.