கிரெட்டா துன்பெர்க் வழியில் காங்கிரஸ்

சர்வதேச யோகா தினத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தன. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘இது யோகா தினம், யோகா தினத்தின் பின்னால் ஒளிவதல்ல’ என பதிவிட்டிருந்தார். ‘யோகா ஹிந்து அல்ல, ஓம் என கோஷமிடுவது யோகாவை வலுப்படுத்தாது, அல்லாவின் பெயரை உச்சரிப்பது நடைமுறையை பலவீனப்படுத்தாது’ என்று அபிஷேக் மனு சிங்வி டுவிட்டரில் பதிவிட்டார். காங்கிரஸின் ஊதுகுழலான நேஷனல் ஹெரால்டும் ‘யோகா ஹிந்து அல்ல’ என்று பிரசங்கம் செய்தது. சசி தரூர் ஒரு கார்ட்டூனை பதிவிட்டு அதனை‘சோபசனா’ எனகூறி கிண்டல் அடித்திருந்தார். இப்படி இவர்கள் செயல்படுவது கிரேட்டா துன்பெர்க்கின் டூல் கிட்டில் சொல்லப்பட்டுள்ளதை ஒட்டியே நடைபெறுவதாக வலைத்தளவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

டூல்கிட்:

ஸ்வீடிஷ் சுற்றுசூழல் ஆர்வலர் என கூறிக்கொண்டு பல நாடுகளில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியை தூண்டிவிடும் கிரெட்டா துன்பெர்க் வெளியிட்ட கருவித்தொகுப்பின் வழிகாட்டுதலின்படியே விவசாய போராட்டம் நடைபெற்றது. பெங்களூரைச் சேர்ந்த ‘ஆர்வலர்’ திஷா ரவி, காலிஸ்தான் சார்பு அமைப்பான போயடிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷனின் வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் ஆகியோரால் கிரெட்டா துன்பெர்க் கருவித்தொகுப்பு உருவாக்கப்பட்டு பகிரப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கிரெட்டா கருவித்தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களில் ஒன்று, பாரதத்தின் யோகா பிம்பத்தை சீர்குலைப்பது என்பது குறிப்பிடத்தக்கது.