கொலை செய்ய திட்டமிட்ட காங்கிரஸ் தலைவர்

கர்நாடக காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஆர் விஸ்வநாத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எம். கோபாலகிருஷ்ணாவை பிடிக்க காவல்துறையினர் தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில், கீழமை நீதிமன்றத்தால் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில், விடுவிக்கப்பட்ட குற்றவாளியை காவல்துறையினர் மீண்டும் தற்போது கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ஆத்தூரைச் சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான காங்கிரஸ் தலைவர் எம். கோபாலகிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். முன்னதாக, பா.ஜ.க எம்.எல்.ஏ விஸ்வநாத், பெங்களூரு யெலஹங்கா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றபோது, அந்தத் தொகுதியில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் கோபாலகிருஷ்ணா, விஸ்வநாத்தை கொல்ல வேண்டும் என்று விரும்பினார். அவரைக் கொலை செய்வது குறித்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு இடையே நடந்த விவாதம், கொலை செய்ய ரவுடிகளை பயன்படுத்த அவர்கள் ஆலோசித்த விஷயம் ஆகியவை குறித்தவீடியோஆதாரங்கள் அடங்கிய ஒரு பென் டிரைவ் கிடைத்ததையடுத்து கடந்த 2021ல் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.