பரிதாபாத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கள்ள சந்தையில் விற்றதாக பிஜேந்திர மாவி என்ற காங்கிரஸ் தலைவரை பரிதாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திகான் சாலையில் கெடிபுல் நகர் காவலர்கள் வாகன தணிக்கையின்போது பிஜேந்திர மாவி வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, அவரின் வகனத்தில் 42 காலி சிலிண்டர்களும் 8 ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவரிடம் அதற்கான எந்த உரிமமோ அனுமதியோ இல்லை. எனவே, காவல்துறையினர் அவரை கைது செய்து காவலில் எடுத்ததுடன் 50 ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கைப்பற்றினர். விசாரணையில், காங்கிரஸ் தலைவர் ஆக்ஸிஜனை பதுக்கி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்றதை ஒப்புக்கொண்டார்.
பல இரக்கமில்லாத கொடியவர்கள் தற்போதுள்ள கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், புளோ மீட்டர்கள் உள்ளிட்டவற்ரை பதுக்குதல் கள்ள சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பது என ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.