காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

ஜம்மு காஷ்மீர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், “ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் காங்கிரஸ் கட்சி உணரவுமில்லை, பிரதிபலிக்கவும் இல்லை. ஜம்மு காஷ்மீர் தொடர்பான பிரச்சினைகளில் எனது நிலைப்பாடு காங்கிரஸ் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை. கட்சியில் செய்யப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. காங்கிரசில் மாற்றம் வேண்டும் என செயல்படும் ஜி 23 குழுவில் பல திறமையான காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். அவர்களை தலைமை புறக்கணித்தது பெரிய தவறு. காலத்திற்கேற்ப நீங்கள் மாறவில்லை என்றால், பொதுமக்கள், இளைஞர்களின் அபிலாஷைகளை புறக்கணித்தால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள். காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்திற்குக் காரணமான உண்மைக் காரணிகளை சித்தரிக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், நான் 1989 வரை ஸ்ரீநகரில்தான் இருந்தேன். காஷ்மீரி இனப்படுகொலையின் பின்விளைவுகளை காங்கிரஸ் இன்னும் ஏற்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது” என தெரிவித்தார்.