முகமது நபியை பற்றிப் பேசியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ டி. ராஜா சிங்கின் தலையை துண்டிக்க முஸ்லிம் அடிப்படைவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர். அதேசமயம், ஹிந்துக்களின் தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய முஸ்லிம் நபரான முனாவர் பரூக்கியை பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர். இந்த சூழலில், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆயிஷா பர்ஹீன் என்பவர், ராஜா சிங்குக்கு சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ‘ராஜா சிங் நபியைப் பற்றி என்ன சொன்னாலும் தெலுங்கானாவின் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி அவருக்கு ஆதரவளித்ததால் தான் என்று அவர் அவ்வாறு கூறினார். அவர்களின் உதவி இல்லாவிட்டால், ராஜா சிங்கால் இந்த மாநிலத்தில் இதுபோன்று பேச முடியாது’ என்று கூறினார். ஆயிஷா பர்வீன் மட்டுமல்ல, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி செயலர் ரஷீத் கான் என்பவரும், டி. ராஜா சிங்கின் தொகுதியான கோஷாமஹாலில் நுழைந்து, அவரைக் கைது செய்யாவிட்டால், எரித்து சாம்பலாக்கிவிடுவோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மிரட்டியுள்ளார். இவர்கள் மீது மாநில அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமா?