காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண்குமார் ரெட்டி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இது, காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் செயல்பாடுகளை பிடிக்காமல் அனுபவம் மிக்க மூத்த தலைவர்கள் உட்பட பலர் அக்கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சக தலைவர்களுக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், கேரள மாநில முன்னாள் முதல்வரும் நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சராகவும் இருந்த ஏ.கே. ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனி. சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் மேலிடத்திற்கு இந்த அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாகவே மற்றொரு காங்கிரஸ் தலைவரும் பா.ஜ.கவில் இணைந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கிரண்குமார் ரெட்டி, தற்போது பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.