பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்ததையொட்டி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்தது கொண்ட பொது கூட்டம் நடைபெற்றது. ‘புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்ட்சிகள் புறக்கணித்ததன் வாயிலாக, நாட்டின் தேசிய உணர்வையும், 60 ஆயிரம் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பையும் காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்: புதிய பார்லிமென்ட் கட்டடம் சமீபத்தில் திறக்கப்பட்டது. அதை நினைத்து நீங்கள் பெருமைப்படுகிறீர்களா, இல்லையா? இந்தியாவின் கவுரவம் கூடியுள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைந்தீர்களா, இல்லையா? ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள், இதிலும் அரசியல் செய்கின்றன. இது போன்ற அரிய வாய்ப்புகள் பல தலைமுறைகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். அதையும் தங்கள் சுயநலத்துக்காக காங்., பயன்படுத்திக் கொண்டது. நாட்டின் அபரிதமான வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் செய்ய நினைப்பதை ஒரு ஏழை தாயின் மகன் தடுப்பதை கண்டு ஆத்திரம் அடைகின்றனர். அவர்களின் ஊழல் குடும்ப அரசியல் குறித்து கேள்வி கேட்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான், புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை அவர்கள் புறக்கணித்தனர். என்று குறிப்பிட்டார்