கிறிஸ்தவர்களை சங்கடப்படுத்திய காங்கிரஸ்

டெல்லி இளைஞர் காங்கிரஸ் பிரிவு மற்றும் அதன் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் தங்களது அனைத்து கிறிஸ்தவ ஆதரவாளர்களுக்கும் ‘இனிய புனித வெள்ளி’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது சர்ச்சையகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பெரிய வாக்கு வங்கியாகக் கருதப்படும் கிறிஸ்தவ சமூகத்தைப் பற்றி சிறிதும் காங்கிரஸ் கட்சியினர் அறியாதது கிறிஸ்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. புனித வெள்ளி என்று குறிப்பிடப்பட்டாலும், கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இது மகிழ்ச்சியான நாள் அல்ல. கிறிஸ்தவர்களால், புனித வெள்ளி துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மனிதகுலத்தின் பாவங்களை மீட்க இயேசு கிறிஸ்து தனது வாழ்க்கையை தியாகம் செய்தார் என்று நம்பப்படுகிறது. அவர் ரோமானிய வீரர்களால் கேலி செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார், அதன் பிறகு, புனித வெள்ளி நாளில் கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டார். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. காரணங்களை விளக்கும் பல கோட்பாடுகள் உள்ளன. இயேசு கிறிஸ்து தனது உயிரை மனித குலத்திற்காக தியாகம் செய்ததால் புனித வெள்ளி என்று ஒரு கோட்பாடு குறிப்பிடுகிறது. புனித வெள்ளியின் நன்மை உண்மையில் கடவுளைக் குறிக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். எனவே, இந்த நாளில், கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகங்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட விதம், அவருடைய துன்பங்கள், அவர் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் அவர் அனுபவித்த வேதனையான மரணம் ஆகியவற்றை மதிக்கிறார்கள். காங்க்ரஸ் தலைவர்கள், தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் முன், இதுகுறித்து சிறிதாவது ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும்.