கட்டாய மதமாற்ற தடை சட்டம் ரத்து செய்ய காங்., அரசு முடிவு

ர்நாடகாவில், கடந்த பா.., ஆட்சியின் போது, கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும். இதற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பா.., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சில சட்டங்கள் ரத்து செய்யப்படும்எனவும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மே 20ம் தேதி காங்., அரசு பதவியேற்றது. இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில், நடந்தது. அப்போது, பா.., ஆட்சியில் கொண்டு வந்த கட்டாய மதமாற்ற தடை சட்டம், .பி.எம்.சி., எனப்படும் வேளாண் திருத்த சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த மாதம் 3ம் தேதி கூடவுள்ள கூட்டத்தொடரில், இந்த சட்டங்களை ரத்து செய்யும் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பா.., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.