அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாரதத்தின் உள்நாட்டுத் தயாரிப்பான, பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், கோவாக்சின் தடுப்பூசி ஆல்பா, டெல்டா வகை கொரோனா வைரஸ்களை தடுக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டு உள்ளது. இது, உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. கோவிட் வைரசின் உருமாற்றமடைந்த வைரஸ்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை திறம்பட உருவாக்குகிறது’ என தெரிவித்துள்ளது.