பாகிஸ்தானுக்கு கண்டனம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாரதத் தூதரகத்தின் வளாகத்தில் ட்ரோன் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுக்கு சொந்தமான ட்ரோன் என கூறப்படுகிறது. விதிமுறைகளை மீறி ட்ரோன் இயக்கப்பட்டுள்ளதற்கு பாரதம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது என தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அண்மையில் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் பாரத விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். இதில் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.