ரூபிகா லியாகத்திற்கு கண்டனம்

ஏபிபி நியூஸ் தொலைக்காட்சியின் பத்திரிக்கையாளரான ரூபிகா லியாகத், மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள ஜோதிர் லிங்க ஸ்தலமான மஹாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்றார். அங்கு எடுக்கப்பட்ட தனது படங்களை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘உஜ்ஜயினி மன்னரை காணச் சென்றது என்னை மயக்கி விட்டது’ என்று கூறினார். இறைவன் மஹாகாலேஷ்வரை அங்குள்ள மக்கள் உஜ்ஜயினியின் அரசராகவே கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலுக்கு ரூபிகா லியாகத் சென்ற புகைப்படங்களைப் அவர் பகிர்ந்ததற்காக முஸ்லிம்கள் சமூக ஊடகங்களில் அவரை கடுமையாகத் தாக்கினர். அவர் ஒரு முஸ்லிமே அல்ல, அவர் பாவம் செய்துவிட்டார், டிவியில் ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக அவர் தன்னை ஒரு முஸ்லிமாக காட்டிக்கொள்கிறார், ரூபிகா ஒரு காஃபிர் என்று பலர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.