திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது கிறிஸ்துவ நர்சிங் கல்லூரி என்பதால், காலையில் தினமும் ஜெபக்கூட்டம் நடப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஜபக்கூடத்தில் அனைத்து மாணவிகளும் கட்டாயம் பங்கேற்கும் வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் மாணவிகளை கட்டாயப் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த ஏழு நர்சிங் மாணவிகள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து விசாரிக்குமாறு மனு அளித்தனர். அந்த மனுவில், “கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையுமே கட்டாயப்படுத்தி ஜெபக்கூடத்தில் பங்கேற்க வைக்கிறது. அதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளோம். ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் ஜெபக்கூட்டம் நடத்தும் அக்கல்லூரியில் வகுப்புகள் மட்டும் சரிவர நடத்தப்படுவதில்லை. ஜெபக்கூடத்தில் பங்கேற்காத மாணவிகளிடம் ரூ. 200 வசூலிக்கப் படுகிறது. எனவே, எங்கள் சொந்த ஊரிலேயே படிப்பை மேற்கொள்வதற்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்து எங்களுடைய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கித் தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் கல்லூரி தரப்பில் இருந்து, நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி ஜெபக்கூடத்தில் பங்கிற்குமாறு கூறியதில்லை என்ற மழுப்பலான பதில் மட்டுமே வந்துள்ளது.