கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட நஷ்டத்தை பி.எப்.ஐ கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும்படி அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நஷ்டஈடு செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், நஷ்டஈடு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கேரள முதல்வர் பினராய் விஜயன், ‘பாப்புலர் பிரண்ட் முழு அடைப்பு போராட்டத்தில் கடும் வன்முறைகள் அரங்கேறின. இது, கேரளாவில் சமீப காலத்தில் கேள்விப்படாத ஒன்று. திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.