நாட்டில் எப்பொழுதெல்லாம் பிரச்சனைகள், பேரிடர்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உடனடியாக களமிறங்கி மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை, ஜாதி, மத பேதமின்ற அனைவரும் நமது தேசத்தவர் என்ற கண்ணோட்டத்தில் செய்வது சேவாபாரதி. நம் தேசத்தில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் ‘சேவா இண்டர்நேஷனல்’ எனும் பெயரில் பல்வேறு தொண்டு பணிகள் செய்து வருகிறது சேவாபாரதி.
இந்த நிலையில், கேரளாவில் தொற்றுநோய் உள்ளிட்ட சிக்கலான காலகட்டங்களில் நிவாரண அமைப்பாக செயல்பட சேவா பாரதிக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற கண்ணூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, சேவா பாரதி தன்னார்வலர்கள் ‘கட்சி சின்னங்களை’ பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பொய்யான ஒரு காரணத்தை கூறியுள்ளனர். அதே நேரத்தில், கண்ணூர் மாவட்ட நிர்வாகம், முஸ்லிம் லீக்கின் ஒரு பிரிவாக சி.எச். மையத்தை ஒரு நிவாரண நிறுவனமாக அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்டு கட்சி, முஸ்லீம் லீக், காங்கிரஸ் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்பினர்தான் எப்போதாவது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டால் அப்போது தங்கள் கட்சி சின்னங்களை தவறாமல் பயன்படுத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆளும் கம்யூனிச சி.பி.ஐ.எம்மின் பாசிசத் தன்மையை மக்களுக்கு அம்பலப்படுத்தும் ஒரு நிகழ்வாக இந்த சம்பவம் திகழ்கிறது.