தங்கம் கடத்தும் கம்யூனிச தலைவர்கள்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கட்சியின் சமூக ஊடக பிரிவு உறுப்பினருமான அர்ஜுன் அயான்கி, துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு 2.23 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த ஜூன் 21ம் தேதி, கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் முகமது ஷபீக் மெலதில் என்பவர்தான் இந்த தங்கத்தை கடத்தினார். அதனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே நாளில், கோழிக்கோடு மாவட்டம் ராமநட்டுக்கராவில் சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரித்தபோது, இறந்த அந்த ஐந்து இளைஞர்களும் முகமது ஷபீக், அந்த தங்கத்தை ஏமாற்றி எடுத்து சென்றதாகக் கருதி, ஒரு காரை துரத்தியபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தங்கத்தை ஷபீக்கிடம் இருந்து பெறவே, அர்ஜுன் கோழிக்கோடு விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அர்ஜுன் பயன்படுத்திய கார், டி.ஒய்.எப்.ஐ தலைவர் சி. சஜேஷுக்கு சொந்தமானது. அவர் சி.பி.ஐ (எம்) கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் தங்க மதிப்பீட்டாளராக உள்ளார். இதில் மற்றொரு கம்யூனிச தலைவரான ஸ்ரீஜேஷ் தாஸின் பங்கு குறித்தும் விசாரிக்கப்படுகிறது. விசாரணையில், சி.பி.ஐ (எம்) தலைவர்கள் ஒருவர் பி ஒருவராக சிக்குவது அக்கட்சிக்கும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.