கம்யூனிஸ்ட் குடும்பம் மதமாற்றம்

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிரோல்பாலத்தில் வசிப்பவர் கில்பர்ட் பி டி . இவர் ஆளும் கம்யூனிச கட்சியின் அப்பகுதி கிளைக் குழு உறுப்பினராக உள்ளார். இவர் காவல்துறையில் அளித்த புகாரில், ‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினர் நசீமா யூனுஸ் மற்றும் அவரது கணவர் யூனுஸ் ஆகியோர் தன் மனைவியையும் மகனையும் கோழிக்கோட்டில் உள்ள தெர்பியத்துல் இஸ்லாம் சபாவுக்கு அழைத்துச் சென்று முஸ்லிமாக மதமாற்றம் செய்துள்ளனர். மதம் மாறினால் 25 லட்சம் ரூபாயும் ஒரு வீடும் அளிப்பதாக ஆசைகாட்டியுள்ளனர். இதனால் அவர்கள் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும்’ என தெரிவித்துள்ளார். காவலர்கள் சரியாக இதனை விசாரிக்காத்தால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் கண்டுபிடித்து ஆஜர் படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.