திரைத்துறை சண்டைப் பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன், ‘விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சத்ரபதி வீரசிவாஜி, பாலகங்காதர திலகர் எல்லாம் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக நடத்தியுள்ளனர். ஹிந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்த தடை? ஜல்லிகட்டுக்கு கொடி பிடித்தவர்கள் விநாயகர் சதுர்த்தி தடையை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. ஹிந்துக்கள் தேசத்தில் ஹிந்து பண்டிகை கொண்டாட இத்தனை இடர்களா? என்று எண்ணும்போது வேதனை அளிக்கிறது. இது நம் உரிமை, நமது பெருமை. இன்றைய சூழலில், இறையருள் ஒன்றுதான் நம்மையும் நம் நாட்டையும் காக்கும். ஒன்று படுவோம், உறுதிமொழி எடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.