ராணுவம், விமானம் மற்றும கப்பல் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் விமான விபத்தால் உயிரிழந்தார். அவரது பதவி இன்னமும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பணியானது ராணுவ சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் மிகப் பெரிய பணியாகும். பாதுகாப்பு படைகளுக்கும் அரசுக்கும் இடையே ஒத்துழைப்புடன் செயல்படும் ஒரு பதவியாகும். இந்த பதவிக்கு ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள 62 வயதை கடக்காத முப்படைகளின் தளபதிகளில் ஒருவரை நியமிப்பது முந்தைய விதியாக இருந்தது. இந்த விதியில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 62 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள லெப்டினனட் ஜெனரல், ஏர் மார்ஷல், துணை அட்மிரல்களும் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின்படி முப்படைகளின் தலைமை தளபதி பணிக்கு 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் ரேங்க் அதிகாரிகளும் தகுதியுடையவர்களாவார்கள்.