தமிழக அரசின் காமெடி

உக்ரைனில் போர் பதற்றம் ஏற்பட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். அதனை கேட்டு நமது நெஞ்சம் பதறுகிறது. இந்த ரணகளத்திலும் தமிழக அரசு ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டு உக்ரைனில் உள்ள தமிழர்களை வெறுப்பேற்றியுள்ளது. உக்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறி தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை, அதன் தொலைபேசி, மின்னஞ்சல், வலைதள முகவரிகளை வெளியிட்டுள்ளது.

சரி, இப்போது உக்ரைனில் இருந்து நூறு தமிழர்கள் உதவி கேட்டு அழைக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். தமிழக அரசு என்ன செய்து விடமுடியும்? மத்திய அரசே தற்போதைய போர் சூழலில் விமானம் அனுப்பி மீட்க முடியாத சூழலில் உள்ளது. அனுப்பிய விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. இந்த சூழலில், மத்திய அரசின் அனுமதியின்றி தமிழக அரசால் தனியாக விமானம், கப்பல் அனுப்ப முடியுமா? அப்படியே அனுப்பினாலும், உக்ரைனோ ரஷ்யாவோ அதனை பரிசீலிக்குமா?

தமிழ்நாடு என்ற பெயர் இருப்பதால் மட்டுமே இதனை தனி நாடாக இவர்கள் கருதி விட்டார்கள் போலும். இது மத்திய அரசிற்கு கட்டுப்பட்ட ஒரு மாநிலம் மட்டும்தான் என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். செங்கல்பட்டு மருந்து தயாரிப்பு மையத்தில் சொந்தமாக கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு, கொரோனா மருந்து தயாரிக்க உலகளாவிய டெண்டர், மேட் இன் தமிழ்நாடு, 1 பில்லியன் பொருளாதார திட்டம் போன்ற தமிழக அரசின் வெற்று அறிவிப்புகள் வரிசையில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். இதனை மக்கள் புரிந்துகொள்வது நல்லது.