இந்திய இராணுவம் லடாக்கில் ஒரு புதிய பயிற்சியை மேற்கொண்டுள்ளது. ‘பிலிட்ஸ்கிரீக்’ எனப்படும் இந்த முறையானது எதிரிகளை அதிகவேகமாக தாக்கும் முறையாகும்.இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜி ஜெர்மனி பயன்படுத்திய மிக வெற்றிகரமான முறையாகும்.கடந்த வாரம் ஐந்து நாட்கல், வடக்கு கட்டளையக தளபதி லெப் ஜென் உபேந்திர திவேதி லடாக்கில் இருந்தபோது இந்த பயிற்சியை அவர் மேற்பார்வையிட்டார். இத்தாக்கும் பிரிவில் பலவிதமான ராணுவ படைப்பிரிவுகள் இருக்கும்.டேங்க், மோட்டார் இன்பான்ட்ரி, கலாட்படை வீரர்கள் , ஆர்டில்லரி மற்றும் இவைகளை பாதுகாக்க விமானப்படையும் வரும்.இந்த படைகளின் உதவியுடன் ஜெர்மன் நாசி படைகள் அதிவேக மின்னல் வேக தாக்குதல் நடத்தி குறுகிய காலத்தில் எதிரிநாட்டில் ஆழமாக ஊடுருவி தனது இருப்பை பலப்படுத்தி கொள்ளும்.பின்பு அந்நாட்டையே கைப்பற்றும்.கிழக்கு லடாக்கில் சீனாவுடனான மோதல் தொடர்ந்து வரும் வேளையில் தற்போது இந்த பயிற்சியை பாதுகாப்பு படைகள் மேற்கொண்டுள்ளது.