கொரோனா கால நிவாரண சேவையாக கோவை பொண்ணையராஜபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் முழு மூச்சாக தடுப்பூசி போடப்பட்டது. கடந்த ஒன்றரை மாதமாக தத்தளித்து வரும் கோவைக்கு அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த போது மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். தி.மு.க அரசு புதிதாக ஒன்றிய அரசு என்ற புது வார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள். அப்படியெனில், கருணாநிதி மத்திய அரசு என கூறியதை தி.மு.கவினர் தவறு என்கிறார்களா? கருணாநிதிக்கு தெரியாத சட்டம், அரசியலமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டதா? மக்களை திசை திருப்பவுதைதான் இதில் பார்க்கிறேன். நிதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் அவரவர் துறைகளை பேசமால் வேறு துறைகளை பற்றி பேசி வருகின்றனர். மேலும், தி.மு.க கடந்த ஒரு மாதமாக கோவை புறக்கணித்துள்ளது உண்மைதான். இப்போது இந்த பிரச்சனை துவங்கியவுடன் தடுப்பூசி தருகின்றனர்’ இவ்வாறு அண்ணாமலை கூறினார்.