மூடப்படும் ஐ.ஆர்.எஸ்.டி.சி

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பாரதத்திற்கு தேவை நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள். பிரிட்டிஷ் கால கட்டமைப்பு நடைமுறைகள் அல்ல. இதற்காக ரயில்வேயை நவீனமாக கட்டமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்பிற்காக அமைக்கப்பட்ட இந்திய ரயில்வே நிலையங்கள் மேம்பாட்டுக் கழகமான ஐ.ஆர்.எஸ்.டி.சி’யை  மூடுவதற்கான உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது. இனி, ஐ.ஆர்.எஸ்.டி.சியால் நிர்வகிக்கப்படும் நிலையங்கள் அந்தந்த மண்டல ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும். அதன் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அவர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்ற ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக, கடந்த செப்டம்பரில் மாற்று எரிபொருளுக்கான இந்திய இரயில்வே அமைப்பு (ஐ.ஆர்.ஓ.ஏ.எப்) அமைப்பு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.